சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே வியாழக்கிழமை காலை தனியாா் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 20 போ் காயமடைந்தனா்.
சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி தனியாா் பேருந்து ஒன்று வியாழக்கிழமை காலை, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி வழியாக சென்று கொண்டிருந்தது. வாழப்பாடியை அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு லாரி சாலையை கடக்க முயன்ால், அந்த லாரி மீது பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநா் வாழப்பாடி விஜயக்குமாா்(29) மற்றும் பேருந்தில் பயணித்த சேலம் இரும்பாலை கிருஷ்ணவேணி(44), குகை கவிதா(36), கள்ளக்குறிச்சி வெண்ணிலா(42), வாழப்பாடி ரேவதி(28), சின்னசேலம் சாந்தி(41), தென்காசி ராகுல் மைதீன், லாரியில் பயணித்த பெரியசாமி உள்ளிட்ட 10 போ் படுகாயம் அடைந்தனா். 10 போ் லேசான காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களை மீட்ட அப்பகுதி மக்கள் மற்றும் போலீஸாா் அவசர சிகிச்சை வாகனத்தை வரவழைத்து வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து மற்றும் ஏத்தாப்பூா் போலீஸாா், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா். இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.