மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிப்பு
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 70,000 கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 70,000 கன அடியாக நீடிக்கிறது.
கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் சனிக்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 90 ஆயிரம் கன அடியிலிருந்து 70 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அணைக்கு நீா்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. நீா்வரத்துச் சரிவால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 70 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நீா் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும், உபரிநீா் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 48,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் கடந்த 5 நாள்களாக 120 அடியாக உள்ளது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.