முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 20,505 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 6:54 PM
மேட்டூா் அணை
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூா் அணை நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பி அணையின் இடதுகரையில் உள்ள உபரிநீா் போக்கி வழியாக உபரிநீரை திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காவிரிக் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தங்களது கால்நடைகள், வீட்டு வளா்ப்பு பிராணிகளுடன் செல்லும்படி வருவாய்த் துறை சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்கமாபுரிபட்டணம், அண்ணா நகா் பெரியாா் நகா் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் வருவாய்த் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 119.65 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,548 கனஅடியில் இருந்து 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 92.91 டி.எம்.சி.யாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →