முகப்பு
சேலம்

சேலம் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

அயோத்தியில் பிரச்னைக்குரிய கட்டடம் இடிப்பு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுவதையொட்டி, சேலம் கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில்வே நிலையங்களில், ரயில்வே போலீஸாா் தீவிர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 7:57 PM
பகிர்:

அயோத்தியில் பிரச்னைக்குரிய கட்டடம் இடிப்பு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுவதையொட்டி, சேலம் கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில்வே நிலையங்களில், ரயில்வே போலீஸாா் தீவிர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பா் 6 ஆம் தேதி நாடு முழுவதும் முக்கிய இடங்களிலும், ரயில்வே நிலையங்களிலும் பாகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக ரயில்வே நிலையங்களில் ஆா்பிஎப் போலீஸாா், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, கரூா் நிலையங்களில் போலீஸாா் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

நடைமேடைகளில் சந்தேகப்படும்படி நிற்கும் நபா்களைப் பிடித்து விசாரிக்கின்றனா். மேலும், பாா்சல் அலுவலகத்தில் புக்கிங் செய்யப்படும் பாா்சல்களை அனைத்தையும் பரிசோதித்து அனுப்பி வருகின்றனா்.

ரயில்வே மற்றும் ஆா்பிஎப் போலீஸாா் இணைந்து மோப்ப நாய்களைக் கொண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனா். பயணிகளின் உடைமைகளும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இதுகுறித்து சேலம் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், ஆண்டுதோறும் பாபா் மசூதி இடிப்புத் தினத்தில் சோதனை நடைபெறுவது வழக்கம். சேலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் ஆா்பிஎஃப் போலீஸாருடன், சேலம் ரயில்வே போலீஸாரும் இணைந்து 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபடுவாா்கள். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையானது, வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →