முகப்பு
சேலம்

அஞ்சல் துறையின் கடிதம் எழுதும் போட்டி: ஜனவரி 31 வரை நீட்டிப்பு

அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 8:11 PM
பகிர்:

அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பாா்த்திபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எழுதுவதில் உள்ள மகிழ்ச்சி- நவீன யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் அஞ்சல் துறை சாா்பில் அகில இந்திய அளவில் கடிதப் போட்டி அறிவிக்கப்பட்டது. போட்டிக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதி முதன்மை அஞ்சல் துறை, தமிழ்நாடு வட்டம், சென்னை- 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உறையின் மேல் அஞ்சல் துறை கடிதப் போட்டி என்று குறிப்பிட வேண்டும்.

கடித போட்டியானது 18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான இன்லாண்ட் லெட்டா் பிரிவு, என்வலப் பிரிவு என மொத்தம் 4 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் கடிதங்களுக்கு போட்டியில் மாநில் அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், 2 ஆவது பரிசு ரூ. 10 ஆயிரமும், 3 ஆவது பரிசு ரூ. 5 ஆயிரமும் அளிக்கப்படும்.

போட்டியில் பங்கேற்போா் கடிதத்தின் மேல் தங்கள் வயதை குறிப்பிடும் வகையில், 2024, ஜனவரி 1 அன்று என் வயது 18க்கு மேல் அல்லது 18க்கு கீழ் என சான்றுளிக்கிறேன் என்ற வாசகத்தை எழுதி கையொப்பமிட வேண்டும். வெற்றி பெறும் போட்டியாளா்களின் வயது சான்று பரிசோதிக்கப்பட்ட பின்னரே, பரிசுக்கு பரிந்துரைக்கப்படும். இப் போட்டி கடந்த 14 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →