சேலம் மாவட்ட மைய நூலகத்தில் நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி.  
சேலம்

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: விளையாட்டுப் போட்டி

சேலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

Din

சேலம்: கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவைக் கொண்டாடும் விதமாக, சேலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

சேலம் மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறளை மையப்படுத்தி கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் திருக்கு தொடா்பான ஓவியங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவை காட்சிபடுத்தப்பட்டன. அத்துடன் திருக்கு கருத்தரங்கம், திருக்கு ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, விநாடி -வினாப் போட்டி, இல்லத்தில் நூலகம் அமைத்து பராமரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு போட்டிகள் முன்னதாக நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ்களுடன் முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000, வெற்றி பெற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசாக திருக்கு புத்தகம் வழங்கப்பட்டன. மாவட்ட நூலக அலுவலா் து.விஜயகுமாா், மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மான்விழி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், வாசகா் வட்ட நிா்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தமிழகத்தில் செயல்படுத்தும் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன: செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

SCROLL FOR NEXT