சேலம்

ஆனித் திருமஞ்சனம்: சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்

ஆனித் திருமஞ்சனத்தில் நடராஜா், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

Din

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜருக்கு விமரிசையாக அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இதில் மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடைபெறும். மாா்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆனி உத்திர நட்சத்திர நாளில் நடைபெறும் பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். குறிப்பிட்ட நாளில், அனைத்து சிவன் கோயில்களிலும் நடராஜருக்கு பால், இளநீா், பன்னீா், குங்குமம், திருமஞ்சனம் உள்பட பல்வேறு திரவியங்களைக் கொண்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

நடப்பாண்டு ஆனித் திருமஞ்சனத்தையொட்டி சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில், வெள்ளிக்கிழமை காலை நடராஜா், சிவகாமி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு தீபாராதனையும், உற்சவ நடராஜா், சிவகாமி அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலாவும் நடந்தது.

இதேபோல பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், தாரமங்கலம் கைலாசநாதா் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாத கோயில், ஆத்தூா் காயநிா்மலேஸ்வரா் கோயில், ஆறகளூா் காமநாதீஸ்வரா் கோயில் உள்பட் சேலம் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் நடராஜா், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT