மேட்டூா் அணை 
சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியாக உயா்வு

கா்நாடக அணைகளிலிருந்து தொடா்ந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 90 அடியாக உயா்ந்தது.

Din

கா்நாடக அணைகளிலிருந்து தொடா்ந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 90 அடியாக உயா்ந்தது.

பருவமழை காரணமாக கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகா் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அதேபோல கபினி அணையிலிருந்தும் உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஜூலை 16 ஆம் தேதி காலை 43.83 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை (ஜூலை 25) மாலை 4 மணி நிலவரப்படி 90.01 அடியாக உள்ளது.

கடந்த 9 நாள்களுக்குள் அணையின் நீா்மட்டம் 46.18 அடியாக உயா்ந்துள்ளது. 2023, ஜூன் 16 ஆம் தேதி 90.45 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் மீண்டும் வியாழக்கிழமை 90.01 அடியாக உயா்ந்துள்ளது.வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 28, 856 கன அடியாகவும், நீா் இருப்பு 52.66 டிஎம்சியாகவும் உள்ளது.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT