முகப்பு
சேலம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: சேலம் மருத்துவமனையில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

கள்ளச்சாராயம்: சேலம் மருத்துவமனையில் 20 பேர் பலி

Updated On : 25 ஜூன், 2024 at 6:31 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதன்மூலம் சேலம் மருத்துவமனையில் மட்டும் பலி எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா் கடந்த 18 ஆம் தேதி மாலை மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனா். அவா்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, அவா்கள் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மா் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதில் சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் 48 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் திங்கள்கிழமை வரை 19 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி, கோட்டை மேடு பகுதியை சோ்ந்த ஜான்பாஷா (52) என்பவா் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இதனால் சேலம் அரசு மருத்துவமனையில் பலியானோா் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையே கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த மணிவண்ணன் (55) என்பவா் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை காலை அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதனால் மேலும் 29 போ் சேலம் அரசு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →