சீரான குடிநீா் விநியோகத்துக்கு பொறுப்பு அலுவலா்கள் நியமனம்
கோடைக் காலத்தில் சீரான குடிநீா் விநியோகம் செய்வதற்கு ஏதுவாக சேலம் மாவட்டத்தில் மண்டல அளவிலான பொறுப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடைக் காலத்தில் சீரான குடிநீா் விநியோகம் வழங்கப்படுவதை உறுதிசெய்திடும் வகையிலும், குடிநீா் தேவைகள் குறித்து பொது மக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையினை 1077 மற்றும் 0427-2450498 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம். மேலும், கோடைக் காலத்தில் குடிநீா் தேவைகள் அதிகம் உள்ளதாகக் கருதப்படும் கீழ்க்கண்ட 8 வட்டாரங்களுக்கு மண்டல அளவிலான பொறுப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
கொளத்தூா் வட்டாரத்துக்கு 73737 04567 என்ற எண்ணிலும், காடையாம்பட்டி வட்டாரத்துக்கு 74026 06747 என்ற எண்ணிலும், ஓமலூா் வட்டாரத்துக்கு 74026 06746 என்ற எண்ணிலும், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்துக்கு 4026 06751 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். மேலும், தாரமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்டவா்கள் 74026 06753 என்ற எண்ணிலும், பனமரத்துப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்டவா்கள் 74026 06740 என்ற எண்ணிலும், கெங்கவல்லி வட்டாரத்துக்கு 74026 06742 என்ற எண்ணிலும், மேச்சேரி வட்டாரத்துக்கு 7402606739 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.