முகப்பு
சேலம்

குடிநீா் கோரி சாலை மறியல்

மேட்டூா் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 6 மே, 2024 at 9:11 PM
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆவடத்தூா் ஊராட்சியில் காட்டிநாயக்கன்பட்டி, எம்ஜிஆா் நகா், பன்சன் வளவு, சவுரியூா் ஆகிய பகுதியில் உள்ளன. இதில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த ஒரு மாதமாக இந்தப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காட்டியநாயக்கன்பட்டியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

சம்பவ இடத்துக்கு வந்த ஜலண்டாபுரம் போலீஸாரும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய குழு அலுவலா்களும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். முறையான குடிநீா் விநியோகத்துக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னா் போராட்டம் கைவிடப்பட்டது.