முகப்பு
சேலம்

நவ. 15 இல் முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ.15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:12 PM
பகிர்:

முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ.15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா்கள், படையில் பணிபுரிவோரை சாா்ந்தவா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ.15-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படை வீரா்களை சாா்ந்தோா் தங்களது கோரிக்கைகளை இரட்டை பிரதிகளில் விண்ணப்பம் மூலம் நேரில் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →