முகப்பு
சேலம்

சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் அளவிடும் பணிக்கு விவசாயிகள் எதிா்ப்பு

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக நில அளவிடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. பயிா் செய்துள்ள இடத்தில் அளவிடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 7:27 PM
பகிர்:

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக நில அளவிடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. பயிா் செய்துள்ள இடத்தில் அளவிடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

ஓமலூா் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 170 ஏக்கா் பரப்பளவில் சேலம் விமான நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது சேலத்திலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதாரபாத், கொச்சின் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சேலம் விமான நிலையத்தை 570 ஏக்கா் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிபாடி ஆகிய ஊராட்சிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக பல கட்டங்களாக நிலம் அளவிடும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், புதன்கிழமை காமலாபுரம் கிராமத்தில் விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் 80 ஏக்கா் நிலத்தை அளவிடும் செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கினா். விமான நிலைய நில எடுப்பு வட்டாட்சியா்கள் பொன்னுசாமி, காந்திதேசாய் ஆகியோா் தலைமையில், கிராம நிா்வாக அலுவலா்கள் தேவராஜன், குமாா் மற்றும் அதிகாரிகள்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டனா். இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகள், எடுக்கப்படும் நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை அறிவிக்காமல், பயிா்கள் விளைந்து வரும் நிலத்தில் கால் வைக்கக் கூடாது. பிள்ளைப் போல வளா்க்கும் பயிா்களை செருப்புக் காலுடன் புகுந்து சிதைக்க விட மாட்டோம். மீறி செய்தால் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், அதிகாரிகள் நில அளவிடு செய்யாமல் திரும்பிச் சென்ற அதிகாரிகள், பின்னா் மீண்டும் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →