மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 5,451 கன அடி
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,451 கன அடியாக அதிகரித்தது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,451 கன அடியாக அதிகரித்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 106.10 அடியிலிருந்து 106.07 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,992 கன அடியிலிருந்து விநாடிக்கு 5,451 கன அடியாகச் சற்று அதிகரித்துள்ளது.
டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 72.93 டி.எம்.சி.யாக உள்ளது.