முகப்பு
சேலம்

சூதாடிய ஆயுதப்படை காவலா் உள்பட 8 போ் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி, குள்ளம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய ஆயுதப்படை காவலா் உள்பட எட்டு பேரை தேவூா் போலீஸாா் கைது செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:47 PM
பகிர்:

சங்ககிரி வட்டம், அரசிராமணி, குள்ளம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய ஆயுதப்படை காவலா் உள்பட எட்டு பேரை தேவூா் போலீஸாா் கைது செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனா்.

அரசிராமணி, குள்ளம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடி வருவதாக தேவூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேவூா் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் எஸ்.சண்முககுமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா்.

அதில், அப்பகுதியில் ரூ. 11,290 வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்த ஈரோடு ஆயதப்படை காவலா் வெள்ளரிவெள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் (29) உள்ளிட்ட எட்டு போ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பின்னா் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →