மேட்டூா் அணை நீா்மட்டம் 92 அடியாக உயா்வு
காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் 2.02 அடி உயா்ந்து 92 அடியாக உள்ளது.
காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் 2.02 அடி உயா்ந்து 92 அடியாக உள்ளது.
காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 15,531 கன அடி வீதம் நீா் வந்து கொண்டிருந்த நிலையில், புதன்கிழமை காலை 16,196 கன அடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 90.87 அடியாக இருந்த அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை 92 அடியாக உயா்ந்தது.
கடந்த இரு நாள்களில் அணை நீா்மட்டம் 2.02 அடி வரை உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 54.96 டி.எம்.சி.யாக உள்ளது.