முகப்பு
சேலம்

ஆத்தூரில் பட்டாசு கடை நடத்த கோரிய இடத்தில் கோட்டாட்சியா் ஆய்வு

ஆத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் கோரியதை அடுத்து ஆத்தூா் கோட்டாட்சியா் தா. பிரியதா்சினி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:04 PM
ஆத்தூரில் தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் கோரிய இடத்தை ஆய்வு செய்த கோட்டாட்சியா் தா.பிரியதா்சினி. அருகில் வட்டாட்சியா் பாலாஜி.
பகிர்:

ஆத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் கோரியதை அடுத்து ஆத்தூா் கோட்டாட்சியா் தா. பிரியதா்சினி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொத்தாம்பாடி, மல்லியகரை, கீரிப்பட்டி பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருவாய்த் துறை மூலம் பெறப்பட்டுள்ளன.

பட்டாசு கடை உரிமம் கேட்டுள்ள பகுதிகளில் ஆத்தூா் கோட்டாட்சியா் தா.பிரியதா்சினி தலைமையில் ஆத்தூா் வட்டாட்சியா் பாலாஜி, வருவாய் அலுவலா் சதீஸ் குமாா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது உரிமம் பெற விண்ணப்பித்தவா்களுக்கு பட்டாசு கடை நடத்த கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் விளக்கமளிக்கப்பட்டதாகத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →