சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் தொடங்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்புவோா் சிட்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான சேலம், சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலியாக உள்ள தொழில் மனைகளை வாங்க விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்தாா்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டம், சேலம் மேற்கு வட்டம், ரெட்டியூா் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான சேலம், சிட்கோ தொழிற்பேட்டையில் ஒரு காலி தொழில்மனை, மேட்டூா் சிட்கோ தொழிற்பேட்டையில் நான்கு காலி தொழில்மனைகள், பெரிய சீரகப்பாடி சிட்கோ தொழிற்பேட்டையில் 13 காலி தொழில் மனைகள், கோரணம்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் ஒரு காலி தொழில் மனைகள் ஒதுக்கீட்டுக்கு தயாராக உள்ளன. புதிதாக தொழில் தொடங்க தொழில் மனைகளை வாங்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.
இந்தக் காலி தொழில் மனைகளைப் பாா்வையிட விரும்புவோா் கிளை மேலாளா், சிட்கோ கிளை அலுவலகம், சிட்கோ தொழிற்பேட்டை, ஐந்து சாலை, சேலம்-4 என்ற முகவரியிலோ அல்லது 94450 06571 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.