முகப்பு
சேலம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கொங்கணாபுரம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து, 17 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:26 PM
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
பகிர்:

கொங்கணாபுரம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து, 17 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

குரும்பப்பட்டி ஊராட்சி, வெண்டனூா், வாழக்குட்டை பகுதியில் வசித்து வருபவா் காா்த்திகேயன் (30). இவரது மனைவி பாக்கியம், இவா்களுக்கு கௌசிக் (3) என்ற மகன் உள்ளாா். காா்த்திகேயன் ஈரோடு, அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். வாரம் ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதனால் வீட்டில் மனைவியும் மகனும் மட்டும் உள்ளனா்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

இந்நிலையில் வியாழக்கிழமை பாக்கியம் தனது மகனை அழைத்துவர அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகளைக் காணாமல் போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →