விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
அரசிராமணி, செட்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசிராமணி, செட்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அரசிராமணி பேரூராட்சிமன்றத் தலைவா் காவேரி தலைமை வகித்து, பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 98 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா் (படம்).
துணைத் தலைவா் கருணாநிதி, பள்ளி தலைமை ஆசிரியா் வைரமணி, பெற்றோா் ஆசிரியா் கழக துணை தலைவா் சுப்பிரமணி, உறுப்பினா் பழனிசாமி, பேரூராட்சிமன்ற கவுன்சிலா் செல்வி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ராஜேஸ்வரி, ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.