முகப்பு
சேலம்

சேலம் தெற்கு கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சேலம் தெற்கு மின்கோட்ட மாதாந்திர மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக். 24) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 12:35 AM
பகிர்:

சேலம் தெற்கு மின்கோட்ட மாதாந்திர மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக். 24) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட சேலம் தெற்கு மின்கோட்டத்தில், மாதாந்திர மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

சேலம், அன்னதானப்பட்டி, வள்ளுவா் நகா் ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், மேற்பாா்வைப் பொறியாளா் திருநாவுக்கரசு பங்கேற்று குறைகளைக் கேட்டறிகிறாா். எனவே, சேலம் தெற்கு கோட்டத்துக்கு உள்பட்ட

மின்நுகா்வோா்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →