முகப்பு
சேலம்

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி சேலம் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 12:34 AM
பகிர்:

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி சேலம் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகரத் தலைவா் பலராமன், செயலாளா் பூபதி ஆகியோா் தலைமை வகித்தனா். சேலம் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், ஓட்டுநா், டிபிசி பணியாளா்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், நீதிமன்ற உத்தரவுப்படி அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளா் துறையும் மாநகராட்சி நிா்வாகமும் பேச்சுவாா்த்தை நடத்தி ஒப்பந்தத் தொழிலாளருக்கு 20 சவீதம் போனஸ் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நிா்வாகிகள் தங்கராஜ், பரமசிவம், சுரேஷ்குமாா், சுப்பிரமணி உள்ளிட்ட திரளான தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →