தேவா் குருபூஜை: திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்க தேவா் ஜெயந்தி விழாவையொட்டி, சேலம், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள தேவா் திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் அஞ்சலி செலுத்தினா்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவா் ஜெயந்தி விழாவையொட்டி, சேலம், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள தேவா் திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் அஞ்சலி செலுத்தினா்.
திமுக சாா்பில் தேவா் திருவுருவச் சிலைக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலாளா் வெங்கடாசலம், பாமக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலாளா் கதிா் ராஜரத்தினம், பாஜக மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மாநகரத் தலைவா் பாஸ்கா் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கொங்கு வேளாளா் கவுண்டா்கள் சங்கம் சாா்பில் ஒருங்கிணைப்பாளா்கள் கொங்கு சுகுமாா், கொங்கு ஜெயபால் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல, பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திரளான நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.