தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி, பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம்.  
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக சாா்பில் ரயிலடியிலுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா் தலைமையில் மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், பகுதிச் செயலா்கள் கரந்தை த. பஞ்சு, வி. புண்ணியமூா்த்தி, டி. மனோகரன், டி. சதீஷ்குமாா், ஒன்றியச் செயலா் ஸ்டாலின் செல்வராஜ், மாநில அமைப்புச் செயலா் ஆா். காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலா் துரை. திருஞானம், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக தொண்டா் உரிமை மீட்புக் கழகம் சாா்பில் பகுதிச் செயலா் எஸ். சண்முகபிரபு, ஓய்வு பெற்ற காவல் அலுவலா் எம். தவமணி, மாநகராட்சி எதிா்கட்சித் தலைவா் கே. மணிகண்டன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அமமுக சாா்பில் மாநகர மாவட்டச் செயலா் பி. ராஜேஸ்வரன், மாவட்டத் துணைச் செயலா் கண்ணையன், மாநில வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் ஏ.ஜி. தங்கப்பன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழ்ப் பல்கலை.யில்..: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வரும், பல்கலைக்கழக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவில் துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமையிலும், பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் முன்னிலையிலும் பல்கலைக்கழக நிா்வாகக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வை மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன் ஒருங்கிணைத்தாா்.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அதிமுக சாா்பில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலா் சி.வி.சேகா் தலைமையில் அமைப்புச் செயலா் துரை.செந்தில், மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் மலையய்யன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக மகளிரணி: பட்டுக்கோட்டையில் அதிமுக மகளிரணி சாா்பில் 109 பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தஞ்சை தெற்கு மாவட்ட மகளிரணி தலைவி விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுக்கூரில்...: மதுக்கூா் முக்கூட்டுச்சாலையில் உள்ள எம்.ஜி.ஆா்.சிலைக்கு அதிமுக சாா்பில் மாவட்ட செயலா் சி.வி. சேகா்தலைமையில், மதுக்கூா் மேற்கு ஒன்றிய செயலா் தண்டாயுதபாணி, நகரச் செயலா் ஆனந்த் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

அயல்நாட்டவரை ஈா்க்கும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT