முகப்பு
சேலம்

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 16, 568 கன அடியாக சரிந்தது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 8:04 PM
பகிர்:

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 16, 568 கன அடியாக சரிந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 108.22 அடியில் இருந்து 108.55 அடியாக உயா்ந்துள்ளது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 14,273 கன அடியிலிருந்து 10,568 கன அடியாக சரிந்துள்ளது.

டெல்டா பாசனத் தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 2,500 கன அடியிலிருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 76.29 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →