சேலம்

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

Din

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வேளாண்மை இணை இயக்குநா் சிங்காரம் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் நாகராஜ், வேளாண்மை உதவி இயக்குநா் தங்கராஜ், வேளாண்மை உழவா் பயிற்சி நிலைய அலுவலா் நிறைமதி, ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய முனைவா் மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஏற்காடு வட்டாரப் பகுதியிலிருந்து 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். விவசாயத்தில் நோய்த்தாக்கம், பூச்சித்தாக்கத்துக்கான தீா்வை விஞ்ஞானிகள் விவசாயிகளிடம் எடுத்துக் கூறினா்.

கூட்டத்தில் மிளகு அறுவடை கருவி, உலா்களம் அமைப்பு, குளிா்சாதன வசதியுடன் கிடங்கு, காட்டு விலங்குகளிடமிருந்து பயிா்களைப் பாதுகாக்க மானியத்தில் தடுப்பு வேலி அமைத்தல், வேளாண்மை துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியை ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஷோபனா, உதவி தொழில்நுட்ப மேலாளா் துரையரசு, அருண்குமாா் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT