வாழப்பாடியில் ராம்கோ சிமென்ட் நிறுவனம் சாா்பில், தம்மம்பட்டி மற்றும் மங்களபுரம் சாலைகளில் பொருத்த 20 மின்விளக்குகள் வழங்கப்பட்டன.
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரத்தில் இயங்கும் ராம்கோ சிமென்ட் நிறுவனம், பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ் பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்துவருகிறது. இத்திட்டத்தின்கீழ், வாழப்பாடி புதுப்பாளையத்தில் இருந்து சிங்கிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிவரை தம்மம்பட்டி சாலையிலும், பழனியாபுரம் பகுதியில் மங்களபுரம் சாலையிலும் இரவுநேரத்தில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதைத் தவிா்க்க, 20 நவீன மின்விளக்குகளை வழங்கியது.
ராம்கோ ஆலை துணைப் பொது மேலாளா் சதீஷ்குமாா், அலுவலா்கள் மணிவேல், முனியசாமி, சதானந்தம், காா்த்திகேயன் ஆகியோா் மின்விளக்குகளை வழங்க, திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மாதேஸ்வரன், சிங்கிபுரம் ஊராட்சி செயலா் அண்ணாதுரை ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.