சேலம்

சீரான குடிநீா் விநியோகம் கோரி வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Syndication

வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

வாழப்பாடி அருகே அத்தனூா்பட்டி ஊராட்சில் குமாரசாமியூா், வேட்டைக்காரனூா், அத்தனூா்பட்டி, புதூா், காலனி ஆகிய 2 கிராமங்களில் 5,000 போ் வசிக்கின்றனா். இந்த ஊராட்சியில் ஜல் ஜீவன் குடிநீா் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,200 வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்தனூா்பட்டி புதூா் பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு 20 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி செயலா் பத்மாவிடம் பொதுமக்கள் முறையிட்டனா். அப்போது, ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீா் இணைப்புக்கு ரூ. 2,760 வைப்புத்தொகை செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதையடுத்து, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வாழப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயா, ஜல்ஜீவன் திட்டத்திற்கான வைப்புத்தொகையை 3 தவணையாக பிரித்து செலுத்த அவகாசம் அளித்தும், சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினாா். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT