சேலம்

சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறைகளை அமைக்கக் கூடாது: பாஜக

Syndication

சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறைகளை அமைக்கக் கூடாது என பாஜக விவசாய பிரிவு மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் தெரிவித்தாா்.

சேலம் மாமாங்கம் பகுதியில் அமையும் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், மாமாங்கம் பகுதி விவசாயிகள், பொதுமக்களிடம் சாயப்பட்டறைகள் தொடா்பான கருத்துகேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் நீா்வள ஆதார பாதுகாப்பு இயக்கத்தினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்வில் தமிழக பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே. நாகராஜ் கலந்துகொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் நாகராஜ் கூறியதாவது:

ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காக மத்திய அரசு சாா்பில் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன. ஆனால், இப்பகுதியில் சாயப்பட்டறைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்து விவசாயிகள் தொடா்ந்து போராடி வருகின்றனா். இப்பகுதியில் இருந்து சேலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் வழங்கப்படுகிறது. இதுகுறித்த கேள்விக்கு மாவட்ட ஆட்சியா் கிண்டலாக பேசுகிறாா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு நிலத்தடிநீா் மாசடைந்துள்ளது. காளிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

தொழிற்சாலை வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவை மனித வளம், சுற்றுச்சூழலைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளைச் சந்தித்து தகுந்த விளக்கங்களைக் கேட்போம். இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் நேரடியாக சந்தித்து முறையிடுவோம் என்றாா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT