தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாம் நாளை டிச.6ந்தேதி சனிக்கிழமையன்று எய்ம் மெட்ரிக் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் எலும்பு,மகப்பேறு,குழந்தை நலம்,இருதயநோய்,நரம்பியல்,தோல்,கண்,பல்,காது மூக்கு, தொண்டை மனநலம், முடநீக்கு இயல் மருத்துவம்,நெஞ்சகம் நோய், நீரிழிவு உள்ளிட்டவைகளில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். மேலும் சித்த மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படும். எனவே, இப்பகுதியைச்சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று கெங்கவல்லி வட்டார அரசு தலைமை மருத்துவா் வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.