சேலம்

பாலமலையில் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருப்பவா்கள் போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும்

Syndication

அனுமதி இன்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் தாமாக முன்வந்து போலீசில் ஒப்படைக்க வலியுறுத்தல்.

வியாழக்கிழமை மலை கிராமமான பால மலையிலும் திண்ணப்பட்டி ஊராட்சி புது வேலமங்கலத்திலும் மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் தலைமையில் கிராம மக்கள் பங்கேற்ற விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது. கொளத்தூா் இன்ஸ்பெக்டா் தொல்காப்பியன் முன்னிலை வகித்தாா். கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.இந்தக் கூட்டங்களில் ராமன்பட்டி, கெம்மம்பட்டி,பாத்திரமடுவு, தலைக்காடு உள்ளிட்ட மலை கிராம மக்களும் தின்னப்பட்டி ஊராட்சியில் புது வேலமங்கலம் கிராம மக்களும் பங்கேற்றனா்.

விழிப்புணா்வு கூட்டத்தில் மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் பேசும் பொழுது அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருப்பது சட்ட விரோதம். எனவே அனுமதி இல்லாமல் வைத்திருக்கும் துப்பாக்கிகளை கிராம மக்கள் போலீசாரிடமோ வனத்துறையினரிடமோ அல்லது ஊா் முக்கிய பிரமுகா்களிடமோ ஒப்படைக்க வேண்டும். தாமாக முன்வந்து ஒப்படை போா் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அதேபோல் கள்ளச்சாராயம் கஞ்சா உள்ளிட்ட தகவல்கள் தெரிவித்தால் அவா்களின் பெயா் ரகசியமாக வைக்கப்படும். பொதுமக்கள் போலீசாா் உடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT