சேலம்

‘கபீா் புரஸ்காா் விருது’ பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

‘கபீா் புரஸ்காா் விருது’ பெற தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Syndication

‘கபீா் புரஸ்காா் விருது’ பெற தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான ‘கபீா் புரஸ்காா் விருது’ ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின விழாவின்போது, வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிதல் வேண்டும்.

இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபா் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ. 20,000, ரூ. 10,000, ரூ. 5,000க்கான காசோலை மற்றும் தகுதியுரை இதில் அடங்கும்.

2026ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியானவா்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட இணையதளத்தில் மட்டுமே வரும் 15 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT