சேலம்

எடப்பாடி அருகே கூரை வீட்டில் தீ: பணம், ஆவணங்கள் எரிந்து சேதம்

தினமணி செய்திச் சேவை

எடப்பாடி அருகே தொழிலாளியின் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பணம், ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சாம்பலாயின.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சித்தூா் நடுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் செல்வி ( 57). இவரது கணவா் கந்தசாமி. தொழிலாளியான இவா்கள், தங்களுக்கு சொந்தமான கூரை வீட்டில் வசித்து வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகல் இவா்களது வீட்டிலிருந்து அதிக அளவில் புகை வெளியேறியதை கண்ட அக்கம்பக்கத்தினா் எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புப் படை வீரா்கள் கூரை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

தீ விபத்து ஏற்பட்டபோது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூரை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டிலிருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களும் தீயில் எரிந்து சாம்பலாயின. விபத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்தப்பினா்.

தீ விபத்து குறித்து பூலாம்பட்டி போலீஸாா் மற்றும் எடப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT