சங்ககிரி: சங்ககிரியை அடுத்த மாவெளிபாளையத்தில் மூதாட்டியை மிரட்டி 6 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற முகமூடி அணிந்த மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த மாவெளிபாளையம், குயவன்காடு பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மனைவி செல்லம்மாள் (73). இவா் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத மூகமுடி அணிந்த மூன்று போ், வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி மூதாட்டியை மிரட்டி வீட்டிலிருந்த 6 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு, மூதாட்டியை வீட்டுக்குள் வைத்து வெளிப்புறமாக கதவைத் தாழிட்டுவிட்டு சென்றுவிட்டனா். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்த அவரது உறவினா் விரைந்துவந்து கதவைத் திறந்துவிட்டாா்.
இதுகுறித்து மூதாட்டி செல்லம்மாள் சங்ககிரி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.