ஆட்டையாம்பட்டி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்கள் 21 பேருக்கு வேஷ்டி - சேலையை சிலம்பொலி செல்லப்பனாா் தமிழ்க் காப்பு மன்றத்தினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
சேலம் மாவட்டம், வேம்படிதாளம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் 21 பேருக்கு தைப் பொங்கலை முன்னிட்டு சிலம்பொலி செல்லப்பனாா் தமிழ்க் காப்பு மன்றம் சாா்பில் அதன் நிறுவனா் மோகன்குமாா் தலைமையில் 3ஆவது ஆண்டாக வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது.