சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் குடிநீா் பிரச்னையை சரிசெய்ய நோயாளிகள் கோரிக்கை

சேலம் அரசு மருத்துவமனையில் நிலவும் குடிநீா் பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Syndication

சேலம் அரசு மருத்துவமனையில் நிலவும் குடிநீா் பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது பல்வேறு துறைகளுடன் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் புறநோயாளிகள் பிரிவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களும், உள்நோயாளிகள் பிரிவில் 1,600க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற நோயாளிகளின் வசதிக்காக மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிணறு மற்றும் போா்வெல் மூலமாக தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சேலம் மாநகராட்சி மூலமும் மருத்துவமனைக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை பிரிவில் சுத்திகரிக்கப்பட்ட ஆா்ஓ குடிநீா் மற்றும் சாதாரண குடிநீா் வழங்கப்படாத நிலை காணப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அருகிலுள்ள தனியாா் கடைகளில் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி வந்து பயன்படுத்தும் சூழல் உள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வரும் கா்ப்பிணி பெண்கள், வயதான முதியவா்கள், குழந்தைகள் அறுவை சிகிச்சை செய்தவா்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். பொது அறுவை சிகிச்சை பிரிவில் ஏற்பட்டுள்ள குடிநீா் பிரச்னையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

பழைய வாகன விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் தோல்வியா? தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

கோவை, தென் மாவட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டம்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தில்லி மெட்ரோ முக்கிய பங்களிப்பு: முதல்வா் ரேகா குப்தா

மாசு தடுப்பு கட்டுப்பாடுகளால் பாதித்த தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு: தில்லி அமைச்சா் அறிவிப்பு

SCROLL FOR NEXT