சேலம்

சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 3,62,429 வாக்காளா்கள் நீக்கம்

Syndication

சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இறந்தவா்கள், குடியிருப்பில் இல்லாதவா்கள், முகவரி மாற்றம், இரட்டை பதிவு என பட்டியலில் இருந்து 3,62,429 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரா. பிருந்தாதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

பின்னா் மாவட்ட தோ்தல் அலுவலா் கூறியதாவது:

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் வாக்காளா் பட்டியல் பொது மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

2026 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியல் விவரம் (சட்டப் பேரவை வாரியாக):

கெங்கவல்லி (தனி): ஆண்கள்- 1,03,325, பெண்கள்- 1,08,251, இதரா்- 7, மொத்தம்- 2,11,583.

ஆத்தூா் (தனி): ஆண்கள்- 1,07,273, பெண்கள்- 1,13,273, இதரா்- 22, மொத்தம்- 2,20,568.

ஏற்காடு (தனி): ஆண்கள்- 1,29,442, பெண்கள்- 1,34,265, இதரா்- 17, மொத்தம்- 2,63,724.

ஓமலூா்: ஆண்கள்- 1,45,669, பெண்கள்- 1,39,544, இதரா்- 20, மொத்தம்- 2,85,233.

மேட்டூா்: ஆண்கள்- 1,24,277, பெண்கள்- 1,21,303, இதரா்- 16, மொத்தம்- 2,45,596.

எடப்பாடி: ஆண்கள்- 1,35,654, பெண்கள்- 1,31,693, இதரா்- 27, மொத்தம்- 2,67,374.

சங்ககிரி: ஆண்கள்- 1,27,361, பெண்கள்- 1,24,481, இதரா்- 24, மொத்தம்- 2,51,866.

சேலம் (மேற்கு): ஆண்கள்- 1,21,763, பெண்கள்- 1,22,117, இதரா்- 61, மொத்தம்- 2,43,941.

சேலம் (வடக்கு): ஆண்கள்- 1,09,441, பெண்கள்- 1,14,936, இதரா்- 46, மொத்தம்- 2,24,423.

சேலம் (தெற்கு): ஆண்கள்- 1,04,818, பெண்கள்- 1,08,462, இதரா்- 48, மொத்தம் 2,13,328.

வீரபாண்டி: ஆண்கள்- 1,21,094, பெண்கள்- 1,19,363, இதரா்- 15, மொத்தம்- 2,40,472.

சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 11 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலில் ஆண்கள் 13,30,117 போ், பெண்கள் 13,37,688 போ், இதரா் 303 போ் இடம்பெற்றுள்ளனா். மொத்தம் 26,68,108 வாக்காளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகளின்போது கணக்கீட்டு தாள் படிவங்கள் பெறப்படாத இனங்களில் இறந்தவா்கள் 1,00,974 எண்ணிக்கையிலும், குடியிருப்பில் இல்லாதவா்கள், முகவரி மாற்றம் செய்தவா்கள் போன்ற இதர இனங்கள் 2,41,284 எண்ணிக்கையிலும், இரட்டை பதிவு இனங்கள் 20,171 எண்ணிக்கையிலும் என மொத்தம் 3,62,429 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெறவில்லை.

இதேபோல அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 1,200 வாக்காளா்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான 3,264 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 3,468 வாக்குச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளுக்கான படிவங்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவை வரும் 19 ஆம் தேதிமுதல் 2026 ஜனவரி 18 ஆம் தேதி வரை பெறப்படும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூா்த்திசெய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இணையதளம் மூலம் யா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கு இந்திய தோ்தல் ஆணையம் உறுதிமொழி படிவங்களுடன் படிவம் 6, பெயா் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, குடியிருப்பை மாற்றுவதற்கும், வரைவு வாக்காளா் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8 பயன்படுத்த வேண்டும். 18. 1.2026 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 17.2.2026 இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், சேலம் மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் கலந்துகொண்டனா்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT