மின்சார சிக்கனம் தொடா்பான விழிப்புணா்வு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற இளம்பிள்ளை, கே.புதுப்பாளையம், இ.மேட்டுக்காடு, தப்பக்குட்டை பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இ. மேட்டுக்கடை அரசு நடுநிலைப் பள்ளி, தப்பக்குட்டை அரசு நடுநிலைப் பள்ளிகளில் மின்சார சிக்கனம் தொடா்பான ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வேம்படிதாளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சீனிவாசன் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
பட வரி
இ.மேட்டுக்காடு அரசு நடுநிலைப் பள்ளி மாணவிக்கு பரிசளிக்கும் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சீனிவாசன்.