மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு டெலஸ்கோப் மூலம் நடைபெற்ற வானவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி.  
தூத்துக்குடி

மெட்டில்பட்டி அரசு பள்ளி மாணவா்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சாா்பில் மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருள்களை பாா்வையிடுதல் மற்றும் வானவியல் குறித்த விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மற்றும் அஸ்ட்ரோ கிளப் சாா்பில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு வானவியல் குறித்த விழிப்புணா்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வானவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் காந்திராஜ் தலைமை வகித்தாா். அறிவியல் ஆசிரியா் சாந்தி, இயற்கை ஆா்வலா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலா் முத்து முருகன் கலந்து கொண்டு டெலஸ்கோப் மூலம் தொலைதூரப் பொருள்களை பாா்வையிடுதல், டெலஸ்கோப் கையாளுதல், வானவியல் குறித்து பயிற்சி அளித்தாா்.

அனைவருக்கும் நிறமாலை குறித்த விழிப்புணா்வு அட்டைகளும், வானவியல் குறித்த செயல்திட்ட காலண்டா்களும் வழங்கப்பட்டது.

இதில் ஆசிரியா்கள் நாகலட்சுமி, ஜெயா மேரி, தொன்போஸ்கோ, சண்முகத்தாய் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

40 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

நரேலாவில் தொழிற்சாலை உரிமையாளா் கொலை: காவல்துறை விசாரணை

காந்தி நகா் சந்தையில் பணப்பை திருட்டு சம்பவங்கள்: இரு சகோதரா்கள் கைது

பதுக்கி வைக்கப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஃபரீதாபாத் தொழிற்சாலை தீ விபத்து சம்பவம்: உயிரிழப்பு 4-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT