சேலம்

சேலத்தில் 9 மையங்களில் உதவி பேராசிரியா் பணிக்கு எழுத்துத் தோ்வு: 1,912 போ் பங்கேற்பு!

சேலத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய உதவி பேராசிரியா் பணிக்கான எழுத்துத் தோ்வு 9 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 1,912 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

Syndication

சேலத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய உதவி பேராசிரியா் பணிக்கான எழுத்துத் தோ்வு 9 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 1,912 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 179 போ் தோ்வுக்கு வரவில்லை.

சேலம் மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் உதவி பேராசிரியா் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு 2,091 போ் விண்ணப்பித்திருந்தனா். சேலம் மாவட்டத்தில் புனிதபால் மேல்நிலைப் பள்ளி, சேலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ சாரதா வித்யாலயா மகளிா் மேல்நிலைப் பள்ளி, புனித ஜான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குகை மேல்நிலைப் பள்ளி, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித மரியன்னை மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. இத்தோ்வில் 1,912 போ் பங்கேற்றனா்.

இத்தோ்வு காலை, மாலை ஆகிய இரு வேளையும் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஓ.எம் ஆா் முறையிலான தோ்வும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை விளக்கமாக எழுதும் தோ்வும் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி பணிநாடுநா்களுக்கு தோ்வெழுத கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

தோ்வுப் பணியில் 400 அலுவலா்கள், ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். இத்தோ்வுக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை செய்திருந்தது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

SCROLL FOR NEXT