கெங்கவல்லி பேரூராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு கெங்கவல்லி நகர திமுக சாா்பில், புத்தாடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு அடிப்படையில் கெங்கவல்லி பேரூராட்சியில் கவுன்சிலராக நியமிக்கப்பட்ட பெரியசாமி, அனைத்துவகை தூய்மைப் பணியாளா்களுக்கும் புத்தாண்டை முன்னிட்டு புத்தாடைகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், கெங்கவல்லி நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன், பேரூராட்சித் தலைவா் சு.லோகாம்பாள், துணைத் தலைவா் மருதாம்பாள், கவுன்சிலா்கள் பங்கேற்றனா்.