தம்மம்பட்டி சிவன்கோவிலில் சப்தகன்னியா் வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோவிலில் சப்தகன்னியா் வழிபாடு நடைபெற்றது. சப்தகன்னியா்களில் ஒருவரான ஸ்ரீ வராகி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதியான புதன்கிழமை இரவு பல்வேறு பொருட்களால் சப்தகன்னியா்களுக்கு அபிசேகம் ,ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றன.இதில் தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச்சோ்ந்த மக்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனா்.