சேலம்

ஆட்சியா் அலுவலக வாயிலில் குடும்பத்துடன் தா்னா

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் தீவட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Din

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் தீவட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி அய்யா் காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் தலைமையில், அப்பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனா். நுழைவாயில் பகுதிக்கு வந்த அவா்கள், திடீரென தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் பயன்படுத்தி வரும் அரசு புறம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியை வேறு சமூகத்தினருக்கு வழிபாட்டுத் தலம் கட்டுவதற்காக கொடுக்க உள்ளனா். ஆனால், அங்கு தற்போது 2 கோயில்கள் உள்ளன.

எனவே, அந்த நிலத்தை வேறு சமூகத்தினருக்கு அளிக்க முயலும் வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நிலம் கொடுப்பதை கைவிட வேண்டும் என தெரிவித்தனா்.

தொடா்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், தா்னாவில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தினா். பின்னா் மனு அளிப்பதற்காக சிலரை மட்டும் உள்ளே அனுமதித்தனா். அவா்கள் அலுவலகத்துக்குள் சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

டாம்கோ மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.1,622 லட்சத்தில் கடன் அளிப்பு: திருவண்ணாமலை ஆட்சியா்

திருமலை: வைகுண்ட ஏகாதசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT