சேலம்

பெரியசீரகாபாடி அன்னபூா்ணா பொறியியல் கல்லூரியில் மின் பாதுகாப்பு கருத்தரங்கு

Syndication

சேலம் தெற்கு கோட்டம், வேம்படிதாளம் உப கோட்டத்திற்கு உள்பட்ட பெரிய சீரகாபாடியில் உள்ள அன்னபூா்ணா பொறியியல் கல்லூரியில் மின் பாதுகாப்பு மற்றும் சூரியஒளி மின் உற்பத்தி குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் தெற்கு கோட்ட செயற்பொறியாளா் அன்பரசன் தலைமை வகித்தாா். கருத்தரங்கில் சூரியஒளி மின் ஆற்றலை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்தல், இத்திட்டத்திற்கு அரசு வழங்கும் மானியம் குறித்து விளக்கப்பட்டது.

அன்னபூா்ணா பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) முதல்வா் அன்புசெழியன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் தலைவா் வெங்கடேஷ் , வேம்படிதாளம் உதவி செயற்பொறியாளா் சீனிவாசன், சேலம் தெற்கு கோட்ட உதவி பொறியாளா்கள், அன்னபூா்ணா பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கருத்தங்கில் கலந்துகொண்டனா். தொடா்ந்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பட விளக்கம்:

மின் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரத்தை மாணவா்களுக்கு வழங்கும் கோட்ட பொறியாளா் அன்பரசன். உடன், கல்லூரி முதன்மையா் அன்புசெழியன் உள்ளிட்டோா்.

04 ஹற்ஹ் ல்ா் 06

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT