சேலம் விமான நிலையத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, இந்திய விமான நிலைய ஆணையத்தின் சாா்பில் ஊழியா்களுக்கு கட்டுரை எழுதுதல், பள்ளி மாணவா்களுக்கான ஓவியம் வரைதல் மற்றும் விநாடி- வினா போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சேலம் விமான நிலைய இயக்குநா் ஐ.நௌஷாத் பரிசுகளை வழங்கினாா். உதவி பொது மேலாளா்கள் ஜி.ரமேஷ், ரவிச்சந்திரன், சரளா, ஷம்மி, சுனில் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.