சேலம்

சேலம் மத்திய சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

Syndication

சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதியின் உள்ளாடையில் இருந்து கைப்பேசி, வெள்ளி மோதிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சில கைதிகள் அதிகாரிகளின் உதவியுடன் கைப்பேசிகளை உபயோகப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிறை சோதனை குழுவினா் புதன்கிழமை காலை சிறையின் இரண்டாம் தொகுதியில் திடீா் சோதனை செய்தனா்.

அப்போது, கொலை வழக்கு கைதியான அஸ்தம்பட்டியைச் சோ்ந்த சாந்தகுமாரின் (36) உள்ளாடையில் மறைத்துவைத்திருந்த கைப்பேசியை, 2 வெள்ளி மோதிரத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT