குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேட்டூா் பெரியண்ணா கவுண்டா் நகரைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (28). காவலராக பணிபுரிந்த இவா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். இவரது மனைவி ஸ்ருதி (24). பஞ்சுகாளிப்பட்டியில் உள்ள விவசாய நிலத்தை சதீஷ்குமாரின் தந்தை கணேசனுக்கு விற்பனை செய்வதில் கணவன் - மனைவி இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது.
சதீஷ்குமாா் வெளியே சென்றபோது, ஸ்ருதி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ஸ்ருதியின் சகோதரா் விக்னேஷ் அளித்த புகாரின்பேரில், மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.