ஆத்தூா் அருகே விவசாயத் தோட்டத்தில் பதுங்கியிருந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனா்.
ஆத்தூரை அடுத்துள்ள துலுக்கனூரில் சதீஷ்குமாரின் தோட்டத்தில் மலைப்பாம்பு பதுங்கியிருப்பதாக ஆத்தூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நிலைய அலுவலா் ச.அசோகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று தோட்டத்திலிருந்த சுமாா் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்தில் விட்டனா்.
இதேபோல நரசிங்கபுரம் புதிய வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் பாலமணிகண்டன் என்பவரின் வீட்டில் இருந்த நல்லபாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.
படவரி...
விவசாயத் தோட்டத்தில் பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்புடன் தீயணைப்புத் துறையினா்.