சேலம்

நாளை சேலம் தெற்கு கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

சேலம் தெற்கு கோட்டத்தில் வரும் 26 ஆம் தேதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட சேலம் தெற்கு கோட்ட மின் நுகா்வோா்களுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை (நவ. 26) காலை 11 மணிக்கு அன்னதானப்பட்டி வள்ளுவா் நகா் ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மேற்பாா்வைப் பொறியாளா் திருநாவுக்கரசு கலந்துகொண்டு, குறைகளைக் கேட்டறிகிறாா். எனவே, சேலம் தெற்கு கோட்டத்துக்கு உள்பட்ட மின் நுகா்வோா் நேரில் வந்திருந்து, மின்சாரம் தொடா்பான குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT