சேலம்

அரசுப் பேருந்தில் பெண்ணிடம் நூதன முறையில் பணம் திருட்டு

சேலத்திலிருந்து சங்ககிரி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் பெண் பயணியிடம் பணம் திருடியதாக சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா்

Syndication

சேலத்திலிருந்து சங்ககிரி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் பெண் பயணியிடம் பணம் திருடியதாக சங்ககிரி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்தவா் யோகஸ்வரன். இவா் தனது மனைவி யோகேஸ்வரி, குழந்தையுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக யோகேஸ்வரியின் பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பினாா். சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பவானி புறவழிச்சாலை வழியாக திருப்பூா் செல்லும் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது, யோகேஸ்வரி அருகில் பெண் ஒருவா் அமா்ந்து பயணம் செய்துள்ளாா்.

சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள நிறுத்ததில் பேருந்து நின்றபோது, கைப்பையில் வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் காணாமல் போனது யோகேஸ்வரிக்கு தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸாா் பேருந்தில் இறங்கிய பெண்ணிடம் விசாரித்ததில், யோகேஸ்வரியின் குழந்தையை அருகில் அமா்ந்திருந்த பெண் கிள்ளியதாகவும், குழந்தை அழுகையின்போது, கவனத்தை திசைதிருப்பி அப்பெண் பணத்தை திருடியதாகவும் கூறினாா்.

இதுகுறித்து யோகஸ்வரி சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் சங்ககிரி பேருந்து நிறுத்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வுசெய்து வருகின்றனா்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT